15 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை நீக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|புதிய பேருந்துகளை வாங்கி தமிழ்நாடு அரசு இயக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
"தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகி விட்ட அரசு பேருந்துகள் உள்ளிட்ட அரசு ஊர்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழப்பார்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டு சாலைகளில் இயக்கத்தகுதியற்ற பேருந்துகளை தொடர்ந்து இயக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த ஊர்திகள் இயக்கப்படாவிட்டால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கூறும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது உண்மையும் இல்லை"
15 ஆண்டுகளைக் கடந்த அரசு பேருந்துகளையும், பிற அரசு ஊர்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளையும், ஊர்திகளையும் வாங்கி தமிழ்நாடு அரசு இயக்க வேண்டும்"
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.