< Back
மாநில செய்திகள்
அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு - 25-க்கும் மேற்பட்டோர் காயம்
மாநில செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் உயிரிழப்பு - 25-க்கும் மேற்பட்டோர் காயம்

தினத்தந்தி
|
24 April 2024 8:56 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த லட்சுமி (50 வயது) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்