< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெரம்பலூரில் லாரி மீது அரசு பேருந்து மோதல்; ஓட்டுனர், நடத்துனர் உயிரிழப்பு
|30 July 2022 10:10 AM IST
பெரம்பலூரில் முன்னால் சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதியதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உயிரிழந்து உள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. அந்த லாரியில் இரும்பு கம்பிகள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று லாதி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி உடைந்து நொறுங்கியது. பேருந்தில் இருந்த ஓட்டுனரும், நடத்துனரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.