< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குமரியில் அரசு பேருந்து - கார் மோதி விபத்து... ஆடல், பாடல் குழுவினர் 4 பேர் உயிரிழப்பு.!
|12 May 2023 8:40 AM IST
நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
நாகர்கோவில்,
கன்னியாகுமரியை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து குமரி நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.
கார், நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.