< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
டேக்வாண்டோ போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை
|16 Aug 2022 1:13 AM IST
டேக்வாண்டோ போட்டியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி சேரன் உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சீனியர் பிரிவில் மாணிக்கவாசகம், மகேஸ்வரன், சக்திவேல், குணா, தமிழ்செல்வன், புத்திஸ்கண்ணன், அகில், வைஷ்ணவி, ஆகியோர் பதக்கங்களை வென்றனர். மேலும் சீனியர் பிரிவில் ஒட்டுமொத்த புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி, உடற்கல்வி இயக்குனர், கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவ-மாணவிகள் பாராட்டினர்.