திருச்சி
தமிழகத்தில் கவர்னரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது - திருச்சியில் வைகோ பேட்டி
|தமிழகத்தில் கவர்னரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்று திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
திருச்சி,
தமிழகத்தில் கவர்னரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என்று திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மேகதாது விவகாரம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. அமைச்சர்களை நீக்குவதற்கும், மாற்றுவதற்கும் முதல்-அமைச்சருக்கு தான் அதிகாரம் உண்டு. மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும் வைக்கிற போக்கை மாற்ற வேண்டும்.
தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அனைத்து இடங்களிலும் கட்சி சார்பற்று ஆர்வத்தோடு கையொப்பம் இட்டு வருகின்றனர். மத்திய அரசு இதற்கு பிறகு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நிறைவேறாது
கையெழுத்து இயக்கம் மூலம் தமிழ்நாட்டுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு சென்றடைந்துள்ளது. இதுவே வெற்றி தானே. தமிழக கவர்னர் பிரிட்டிஷ் கவர்னர் போல நடந்து கொள்கிறார். ஜனநாயக படுகொலையை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். தமிழகத்தில் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.