< Back
மாநில செய்திகள்
கவர்னரின் கருத்து வேதனை அளிக்கிறது - கே.பி.முனுசாமி
மாநில செய்திகள்

கவர்னரின் கருத்து வேதனை அளிக்கிறது - கே.பி.முனுசாமி

தினத்தந்தி
|
7 April 2023 12:17 PM IST

உயர்ந்த பதவியில் இருக்கிற ஒரு தலைவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கே அழகில்லை என அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவது பற்றி ஈபிஎஸ் தான் முடிவு செய்வார். நடந்து முடிந்த நிகழ்வு குறித்து ஆளுநர் கூறிய கருத்து வேதனை அளிக்கிறது. உயர்ந்த பதவியில் இருக்கிற ஒரு தலைவர் பொதுவெளியில் கருத்துகள் சொல்வது அவருக்கே அழகு இல்லை.

வெளிநாட்டு நிதியால் போராட்டத்தை தாண்டி ஸ்டெர்லைட் மூடப்பட்டதாக ஆளுநர் கூறியதற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்தகால அரசுகள் ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி கடுமையான உழைப்பால் நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார். அப்படி இருக்கும் போது அந்நிய நாட்டு பணம் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார். சட்டவிரோதமாக பணம் வந்தாலும் உரிய நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்திருப்பார் பிரதமர் மோடி என்றார்.

மேலும் செய்திகள்