< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

மேடை ஏறும்போது தவறி விழுந்த பெண் - ஓடிச்சென்று தாங்கிப்பிடித்த தமிழிசை...!

தினத்தந்தி
|
8 Jun 2022 11:19 AM IST

தவறி விழுந்த பெண்ணுக்கு முதலுதவி செய்த ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ள ஆரோவில் நகரத்தில், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

அப்போது, பெண் ஒருவர் மேடை ஏறும்போது தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. உடனே மருத்துவரான தமிழிசை சௌந்தர்ராஜன், அவருக்கு முதல் உதவி செய்தார். இந்த நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்