< Back
மாநில செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே தூய்மை பணியில் ஈடுபட்ட கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
17 Jan 2024 3:08 AM IST

பதஞ்சலி முனிவர் நினைவிடத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஒரு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். அங்குள்ள திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் ஆலயத்தில், தனது மனைவியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள கோ மடத்திற்குச் சென்று பசுவுக்கு தீவனம் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குச் சென்ற கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்த கவர்னர் ஆர்.என்.ரவி, அங்குள்ள பதஞ்சலி முனிவர் நினைவிடத்தில் தரையில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். இதையடுத்து கவர்னரும், அவரது மனைவியும் கோவிலுக்கு வெளியே தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



மேலும் செய்திகள்