கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
|தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலையில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னை,
தமிழகத்தில் விஷ சாராய சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று காலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று இரவே கவர்னர் மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக விஷ சாராய விவகாரத்தை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சார்பில் தனித்தனியாக கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக கவர்னர் முதல்முறையாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.