< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி
|4 Feb 2023 9:06 PM IST
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு கவர்னர் ஆர்.என். ரவி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் இவரது உடல் பிரேத பரிசோதனையானது நடைப்பெற்றது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திரையுலகத்தில் உள்ள பிரபல பாடகர், பாடகிகள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு கவர்னர்ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்திருந்திருக்கிறார். மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.