நாளை மறுநாள் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
|பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை,
சேலம் அருகே கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சட்டப்படி விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் தொடங்கியதாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்திருந்தார்.
இதில் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், துணைவேந்தர் ஜெகநாதனை அதிரடியாக கைது செய்தனர். தற்போது அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வரும் 11-ம் தேதியன்று பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அலுவலர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.