< Back
மாநில செய்திகள்
குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு
மாநில செய்திகள்

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு

தினத்தந்தி
|
25 Jan 2023 8:15 PM IST

குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும் மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர்.

தமிழ்நாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து நாளை கவர்னர் மாளிகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க அனைத்து கட்சியினருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

அதில் திமுக கூட்டணியை சேர்ந்த சில கட்சிகள் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நாளை நடைபெறும் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்