ராஜ்பவனில் அம்பேத்கர் உருவச்சிலையை திறந்து வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
|கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். அம்பேத்கரின் சிலை அருகே அவரது உருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அம்பேத்கரின் உருவப் படத்துக்கு கவர்னர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிண்டி கவர்னர் மாளிகையில் ஏற்கனவே திருவள்ளுவர், அவ்வையார், பாரதியார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அம்பேத்கரின் சிலை திறக்கப்பட்டுள்ளது