< Back
மாநில செய்திகள்
திருச்சியில் வாழை விவசாயிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்
மாநில செய்திகள்

திருச்சியில் வாழை விவசாயிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

தினத்தந்தி
|
27 Aug 2023 8:50 AM IST

திருச்சியில் வாழை விவசாயிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

திருச்சி,

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழை விவசாயிகளுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது கவர்னரிடம் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்,

அதில் குறிப்பாக, வாழை குறித்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க ஆராய்ச்சி மையத்தில் கல்வி நிலையம் அமைக்க வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் வாழை பழங்களை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும், நவீன தொழில்நுட்பத்தில் வாழை உற்பத்தியை அதிகரிப்பது பற்றி விவசாயிகள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்