< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீலாது நபி: இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி
|8 Oct 2022 3:47 PM IST
இஸ்லாமிய திருநாளான மீலாது நபியை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள மீலாது நபி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மீலாது நபி திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அமைதியை உலகெங்கும் பரப்பிய முகமது நபி பிறந்த இத்திருநாளை நினைகூர்ந்து போற்றி கொண்டாடி மகிழ்வோம். அனைத்து மக்களும் இத்திருநாளை மகிழ்வுடனும், பரஸ்பர அன்புடனும் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.