< Back
மாநில செய்திகள்
கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரிய மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு
மாநில செய்திகள்

கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரிய மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
9 Nov 2022 9:04 AM IST

கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரிய மனு ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவியை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்திருந்தது. திமுக மற்றும் ஒத்த கருத்துடைய எம்.பி.க்களுக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்த அழைப்பில்,

ஒத்த கருத்து உடைய எம்பிக்கள் அண்ணா அறிவாலயம் வந்து கோரிக்கை மனுவை படித்துப் பார்த்து கையெழுத்திட டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் கூறியதையடுத்து கவர்னரை திரும்ப பெற வலியுறுத்திய எம்.பிக்கள் அதில் கையெழுத்திட்டனர்.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனு இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்