< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த கவர்னர் நினைக்கிறார்: ஆர்.எஸ். பாரதி
|22 Aug 2023 5:22 PM IST
திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நினைக்கிறார் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை தினத்தை ஏன் மெட்ராஸ் தினம் என கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறி இருக்கிறார்.திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த கவர்னர் ஆர்.என்.ரவி நினைக்கிறார்
உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் காலில் நடிகர் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியது அவரது விருப்பம். புரட்சி தமிழர் என எடப்பாடி பழனிசாமியை அழைப்பதன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தமிழர் அல்ல என்பதை காட்டுகிறது" என்றார்.