புதுக்கோட்டை
கவர்னர் தனது அதிகாரங்களை மீறி செயல்படுகிறார்-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
|கவர்னர் தனது அதிகாரங்களை மீறி செயல்படுவதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவர்னர் ரவி வந்த பிறகு நடக்க வேண்டிய பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறாததை தான் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர். பட்டமளிப்பு விழாக்கள் உரிய காலத்தில் நடந்தால் தான் மாணவர்களுக்கு அது உரியதாக இருக்கும். மத்திய அரசின் பிரதிநிதியாக கவர்னர் செயல்பட வேண்டும். மத்திய, மாநில அரசுக்கு பாலமாக இருக்க வேண்டியவர் தான் கவர்னர். 2 பேருக்கும் சண்டை மூட்டிவிடுகிற, மேற்பார்வையிடுகிற வேலை அவருக்கு உரியதல்ல. கவர்னர் தனது அதிகாரங்களை எல்லை மீறி செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செய்ய கூடிய பணிகளை தானும் செய்யக்கூடிய அளவிற்கு செயல்படுகிறார். எல்லோரையும் அழைத்து பேசி கூட்டம் நடத்துவது, கருத்தரங்கு நடத்துவது, கலாசார நிகழ்ச்சி நடத்துவது என்பது வருந்தத்தக்க ஒன்று. இது நீதிமன்றத்திற்கு போனால் மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளாவார். இவ்வாறு அவர் கூறினார்.