< Back
மாநில செய்திகள்
அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது: அண்ணாமலை
மாநில செய்திகள்

அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது: அண்ணாமலை

தினத்தந்தி
|
21 May 2023 11:28 AM IST

அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது என்று ஆளுநரை சந்தித்த பிறகு அண்ணாமலை கூறினார்.

சென்னை,

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும். விஷச்சாராய மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணை நேர்மையாக நடைபெற வாய்ப்பு இல்லை.

அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது, சட்டத்தை காக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை; கைகள் கட்டப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து முதல்வரிடம் விரைவில் வெள்ளை அறிக்கை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்