< Back
மாநில செய்திகள்
தமிழக மக்களின் கோபத்திற்கு கவர்னர் ஆளாகியுள்ளார் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை
மாநில செய்திகள்

'தமிழக மக்களின் கோபத்திற்கு கவர்னர் ஆளாகியுள்ளார்' - காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
18 Nov 2023 12:37 PM IST

சமூக நீதியை கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

சென்னை,

கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசியதாவது;-

"சமூக நீதியை கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ராஜ் பவனை ஒரு ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாற்றி வருகிறார். அண்ணா பல்கலைக்கழகம் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி கவர்னர் பேசுவாரா?

தமிழக மக்களின் கோபத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார். ஆளும் அரசின் மீது வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார். கவர்னரின் நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடு மன்னித்து வருகிறார். முதல்-அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசினார்.

மேலும் செய்திகள்