< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் - ஜி.கே.வாசன் வரவேற்பு
|9 Oct 2022 4:30 AM IST
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார்.
சென்னை,
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, கடந்த செப்.26-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த அவசரச் சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார். இதனால் வருகிற அக்டோபர் 17-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.