< Back
மாநில செய்திகள்
ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
மாநில செய்திகள்

ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

தினத்தந்தி
|
23 Nov 2023 9:57 PM IST

கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் சாடியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் நிர்வாக நிறுத்த முடிவு எடுத்துள்ளது.அதற்கு பதில் ஊதா நிற பால் பாக்கெட் வினியோகிக்க முடிவு செய்துள்ளது. ஊதா நிற பால் பாக்கெட்டின் விலையினை பச்சை நிற பால் பாக்கெட் விலைக்கு இணையாக விற்பனை செய்வது என்பது மறைமுகமாக பாலின் விலையை உயர்த்துவதற்குச் சமம்.

இது ஏழை எளிய மக்களை ஏமாற்றும் செயல். கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை ரத்து என்ற முடிவினை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்