< Back
மாநில செய்திகள்
காணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

காணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம்

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

காணை வட்டாரத்தில் பசுமை குடில் அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது.

காணை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக பசுமை குடில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட சூழலில் வெள்ளரி, தக்காளி, குடை மிளகாய் போன்ற காய்கறிகள் மற்றும் ரோஜா, சாமந்தி, ஜெர்பெரா, கார்னேஷன் போன்ற மலர்களை ஊக்குவிக்க பசுமை குடில்கள் அமைத்து சாகுபடி செய்யலாம். அதிகரிக்கப்பட்ட உற்பத்தி, வீரியத்துடன் கூடிய சீரான பயிர் வளர்ச்சி போன்ற பயன்களை கொண்ட பசுமை குடிலை ஒரு விவசாயி, 500 முதல் 4 ஆயிரம் சதுர அடி வரை அரசு மானியத்தில் அமைக்கலாம். இப்பசுமை குடில் அமைத்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் காணை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு உழவன் செயலி அல்லது TN HORTNET என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த தகவலை காணை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) சங்கவிபிரியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்