< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்
|16 April 2023 6:18 PM IST
ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே தந்தையே மகனையும், தாயாரையும் வெட்டி கொலை செய்துள்ளார் என்ற செய்தியும், இந்தத் தாக்குதலில் மருமகள் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது.
இதுபோன்ற ஆணவப் படுகொலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு இதனைத் தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.