< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் அரசு பள்ளி ஆசிரியர் திடீர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் அரசு பள்ளி ஆசிரியர் திடீர் சாவு

தினத்தந்தி
|
21 April 2023 1:17 AM IST

சின்னசேலத்தில் ஓடும் பஸ்சில் அரசு பள்ளி ஆசிரியர் திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னசேலம்,

சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 58). குச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றார். அந்த பஸ் கள்ளக்குறிச்சிக்கு சென்றபோது, அதில் இருந்து இறங்காமல் தொடர்ந்து பஸ் சீட்டில் அவர் தூங்கியபடி இருந்தார். இதனிடையே பஸ் சின்னசேலம் அருகில் சென்றபோது, சந்தேகமடைந்த சக பயணிகள், சுப்பிரமணியனை எழுப்பினர். அப்போதுதான் சுப்பிரமணி சீட்டிலேயே மயங்கி கிடப்பது தெரிந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு முன்பு சென்று பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அதனை தொடர்ந்து பஸ்சில் மயங்கி கிடந்த சுப்பிரமணியனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சுப்பிரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பஸ் கண்டக்டர் ஜோதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் அரசு பள்ளி ஆசிரியர் திடீரென மயங்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்