< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருமணம் ஆகாததால் மன உளைச்சல்: தமிழ் ஆசிரியர் தற்கொலை..!
|5 Aug 2022 10:19 AM IST
நீலகிரியில் திருமணம் ஆகாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
நீலகிரி:
பந்தலூர் அருகே அம்பலமூலாவில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரகுநாதபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (வயது 55) என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதற்காக அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காளீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வீட்டில் சோதனையிட்டபோது, அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், 'திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்தேன். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அம்பலமூலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.