< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
14 July 2023 5:27 AM IST

மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய அரசுப்பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் நாகனேந்தல் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 22 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி பகுதியை சேர்ந்த தனபால் (வயது 57) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர் கைது

இதையறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரியாபட்டி போலீசார் மற்றும், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் விரைந்து வந்து, ஆசிரியர் தனபாலிடம் விசாரித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்