சிவகங்கை
அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
|அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
திருப்பத்தூர்
பள்ளத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். திட்ட இயக்குனர் சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.மேலும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியர்களுக்கு பரிசு தொகை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக், பேரூராட்சி சேர்மன் சாந்திசங்கர், ஒன்றிய துணை செயலாளர் கவுன்சிலர் வெள்ளையம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.