< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11-ந் தேதி முதல் செஸ் போட்டி நடத்த உத்தரவு
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11-ந் தேதி முதல் செஸ் போட்டி நடத்த உத்தரவு

தினத்தந்தி
|
26 Jun 2022 5:46 PM IST

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11-ந் தேதி முதல் செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 11-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செஸ் போட்டியில் வெற்றி பெறுவோர் செஸ் ஒலிம்பியாட் பார்க்கவும், சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடவும் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் போட்டி நடத்துவதற்தாக ஜூலை 2-க்குள் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும் செஸ் போட்டியின் விதிமுறை மற்றும் விளையாட்டு நுட்பங்கள், மாணவர்களுக்கு கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்