< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள்
|28 Feb 2023 1:09 AM IST
நூலகத்தில் உறுப்பினர்களாக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்தனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், சாலைக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 125 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்களது கல்வித்திறன் மற்றும் பொது அறிவை வளர்த்து கொள்வதற்காக அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களை முதல்நிலை நூலகர் ஷான்பாஷா வாழ்த்தி பேசினார். இதில் தலைமை ஆசிரியர் நீலாவதி மற்றும் நூலகர்கள் முருகானந்தம், செசிராபூ கலந்து கொண்டனர்.