< Back
மாநில செய்திகள்
துபாய்க்கு சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!!
மாநில செய்திகள்

துபாய்க்கு சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!!

தினத்தந்தி
|
10 Nov 2022 10:49 AM IST

வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

சென்னை,

2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்தனர். அதன்படி, 68 மாணவ-மாணவிகளை கல்வித்துறை தேர்வு செய்து இருக்கிறது.

ஏற்கனவே அறிவித்தபடி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த வகையில் 68 மாணவர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல உள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொள்கின்றனர். வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளனர்.

இதனிடையே இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டுவிட்டரில், "மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்