< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழா
திருவாரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழா

தினத்தந்தி
|
19 Oct 2023 12:30 AM IST

நீடாமங்கலம் வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவர்கள் கலைத்திருவிழா நடந்தது.

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வட்டார அளவிலான 9, 10-ம் வகுப்பு வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கலைத்திருவிழா நடைபெற்றது. வட்டாரக்கல்வி அலுவலர் ந.சம்பத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் டி.தமிழ்வேந்தன், கே.உதயகுமார், செல்வராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழுத்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் விழாவை தொடங்கி வைத்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி) மாதவன், (தொடக்க நிலை கல்வி) சவுந்தர்ராஜன், (தனியார் கல்வி) மாயகிருஷ்ணன் மற்றும் பலர் பேசினர். விழாவில் கவின்கலை, நுண்கலை, இசையரங்கம், நாடகம், நாட்டியம், கருவி இசை ஆகியவற்றில் 415 மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர்.முன்னதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா வரவேற்று பேசினார். முடிவில் வட்டார கல்வி அலுவலர் (நிலை-2) முத்தமிழன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்