அரியலூர்
அரசு அலுவலர்கள் சங்க கூட்டம்
|அரசு அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
அரியலூரில் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கான சங்கத்தின் ஒன்றிய மற்றும் மாநில உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேசிய விநாயகவேதாந்த ராமானுஜம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சண்முகராஜன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள புதிய மாநில தலைவர் தேர்தல் குறித்து மாநில உயர்மட்ட குழு கூடி விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து அருள்ராஜ் மாநில செயலாளராகவும், ரெங்கராஜன் மாநில துணை பொதுசெயலாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் தண்டபாணி, மாநில பொதுச்செயலாளர் குமார், மாநில பொருளாளர் ரெங்கராஜ், மாநில செயலாளர் (பொறுப்பு) சுருளிராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் கோபி மற்றும் மாநில நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.