< Back
மாநில செய்திகள்
அரசு அலுவலர் சங்க கூட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

அரசு அலுவலர் சங்க கூட்டம்

தினத்தந்தி
|
2 Jan 2023 12:19 AM IST

நெல்லையில் அரசு அலுவலர் சங்க கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் நெல்லை மாவட்ட சங்க கூட்டம் நெல்லை சந்திப்பில் நடந்தது. தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வருகிற 28-ந் தேதி மண்டல அளவில் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்