< Back
மாநில செய்திகள்
இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
23 Dec 2022 5:37 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மதரீதியான பாகுபாட்டுடன் இருப்பதாக அவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அந்த கடிதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 மதரீதியான பாகுபாட்டுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 40-வது பத்தியில் இடம்பெற்றுள்ள புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் குறித்த தீர்மானத்தை இந்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.



மேலும் செய்திகள்