நாமக்கல்
படைவீடு பேரூராட்சியில்அரசு நிலத்தில் குடிசை அமைக்க முயன்றவர்களால் பரபரப்பு
|பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த படைவீடு பேரூராட்சி வெட்டுக்காடு பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இங்கு நேற்று காலை பள்ளிபாளையம், திருச்செங்கோடு, வெப்படை, சவுதாபுரம், படைவீடு மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் குடிசை அமைக்க முயன்றதனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர், படைவீடு பேரூராட்சி தலைவர் ராதாமணி செல்வம், கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன், பேரூராட்சி செயலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம், பெண்கள் நாங்கள் இந்த இடத்தில் குடிசை அமைப்போம் என்று கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு உள்ளன என அளந்து அதற்கேற்ப இடம் வழங்க கலெக்டரிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும் என்றனர். இதை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.