< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"அரசு கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை" - அமைச்சர் திட்டவட்டம்
|9 March 2023 2:53 PM IST
அரசு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது.
இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், அரசு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், மக்களிடமிருந்து பணத்தை சுரண்டுவதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்திருப்பதாக, விமர்சித்தார்.