< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
|6 March 2023 12:15 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
ஊட்டி
ஊட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.டி.சி. திடலில் நடந்த போராட்டத்துக்கு முருகேசன் தலைமை தாங்கினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாட்டை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.பரமேஸ்வரி நிறைவுரை ஆற்றி போராட்டத்தை முடித்து வைத்தார். இதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஜெயசீலன், ஆனந்தன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.