< Back
மாநில செய்திகள்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
7 Sept 2023 12:15 AM IST

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளனா்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், மத்திய செயற்குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் மருதமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், ஆதிமூலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழக அரசிலுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத கால ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் குமரவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்