< Back
மாநில செய்திகள்
சென்னை திருமங்கலத்தில் ஐ.டி. பெண் ஊழியர் அருகில் நிர்வாணமாக படுத்து தூங்கியவர் கைது
சென்னை
மாநில செய்திகள்

சென்னை திருமங்கலத்தில் ஐ.டி. பெண் ஊழியர் அருகில் நிர்வாணமாக படுத்து தூங்கியவர் கைது

தினத்தந்தி
|
24 July 2023 10:57 AM IST

சென்னை திருமங்கலத்தில் ஐ.டி. பெண் ஊழியர் அருகில் நிர்வாணமாக படுத்து தூங்கியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருமங்கலம் பகுதியில் 26 வயதான இளம்பெண், தனியாக அறை எடுத்து தங்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அரசு வேலைக்காகவும் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது அறையில் தூங்கி கொண்டிருந்தார்.அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, தனது அருகில் உடலில் ஒட்டு துணியின்றி நிர்வாணமாக ஆண் ஒருவர் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மது போதையில் ஆடையின்றி படுத்திருந்தவரை எழுப்பி திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஈரோடு மாவட்டம் குப்பிச்சி பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 51) என்பதும், பொள்ளாச்சியில் அரசு வனவராக வேலை செய்வதும் தெரிய வந்தது.

தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்னை திருமங்கலம் வந்த பொன்னுசாமி, அதே குடியிருப்பில் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படிப்பதற்காக தங்கி உள்ள தனது உறவினரை பார்க்க வந்தார். இரவு அங்கேயே தங்கி இருந்தார். நள்ளிரவில் மொட்டை மாடியில் இருந்து போதையில் இறங்கி வந்த அவர், உறவினர் அறைக்கு செல்வதற்கு பதிலாக அறை மாறி, திறந்து கிடந்த ஐ.டி. பெண் ஊழியர் அறைக்குள் சென்று நிர்வாணமாக படுத்து தூங்கியது தெரிந்தது.

இதுபற்றி திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்