< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
|13 July 2023 11:05 PM IST
காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
பாணாவரத்தை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் தலைமை தாங்கினார். ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுபேரவை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் கலந்துகொண்டு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.