< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
போடி அரசு பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
|15 Oct 2022 9:58 PM IST
போடி அரசு பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
போடி அரசு பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு, பாலியல் தொடர்பான குற்றங்களில் இருந்து பாதுகாத்தல், சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து முப்பெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ்மாறன் வரவேற்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், ரமாலட்சுமி, புவனேஸ்வரி, காயத்ரி, சஜூ, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, அரசு குழந்தைகள் நல மருத்துவர் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். முடிவில் உதவி பேராசிரியர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.