< Back
மாநில செய்திகள்
அரசுக்கு உண்டியல் பணத்தை தர முடியாது - அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதம்
மாநில செய்திகள்

அரசுக்கு உண்டியல் பணத்தை தர முடியாது - அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
22 Feb 2023 11:37 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கோவில் உண்டியல் பணத்தை தர முடியாது என அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே அங்காளம்மன் கோவிலின் உண்டியல் பணத்தை தர முடியாது என அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பூசாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறப்பறை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலம் காலமாக அதே பகுதியை சேர்ந்த சிலர் பூசாரி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாசி மாதம் நடக்கும் மயான கொள்ளை திருவிழாவின் நிறைவு நாளில் வழக்கமாக கோவில் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் உண்டியலை திறந்து காணிக்கைகளை எண்ண வந்தனர். அப்போது, கோவில் பரம்பரை பூசாரிகள் இந்த கோவில் தங்களுக்கு சொந்தமானது என கூறி, அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி வெளியே அழைத்து சென்றனர். இதற்கிடையே, அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவரை ஊராட்சி தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்