< Back
மாநில செய்திகள்
அரசு கேபிள் டிவி சேவை மீண்டும் தொடங்கியது
மாநில செய்திகள்

அரசு கேபிள் டிவி சேவை மீண்டும் தொடங்கியது

தினத்தந்தி
|
23 Nov 2022 11:05 AM IST

இதனையடுத்து மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை தடையின்றி கிடைத்து வருகிறது.

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேபிள் டிவி சிக்னல் சீரமைக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான தகவலை அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உரிய உத்தரவுகளை பெற்ற கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி சிக்னலை சீரமைத்துள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை தடையின்றி கிடைத்து வருகிறது.

மேலும் செய்திகள்