< Back
மாநில செய்திகள்
க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு
கரூர்
மாநில செய்திகள்

க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
28 Aug 2023 12:22 AM IST

க.பரமத்திக்கு பயணிகளை ஏற்ற மறுத்த அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை புறப்பட்ட அரசு பஸ்

கரூர் பஸ் நிலையத்தில் இருந்து க.பரமத்தி வழியாக காங்கேயம் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் க.பரமத்தி செல்வதற்காக ஒரு சில பயணிகள் ஏறி உள்ளார்கள். அப்போது கண்டக்டர் க.பரமத்திக்கு ஏறும் பயணிகள், தூரமாக செல்லும் பயணிகளுக்கு இடம் கொடுத்துவிட்டு கடைசியாக ஏறுங்கள் என கூறியுள்ளதாக தெரிய வருகிறது.

இதனையடுத்து பஸ்சில் வந்த அந்த பயணிகள் தங்கள் உறவினர்களிடம் செல்போன் மூலம் க.பரமத்திக்கு வரும் அந்த பஸ்சை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளனர்.

சிறைபிடிப்பு

இதையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் அந்த பஸ் க.பரமத்தி வந்தபோது 10-க்கும் மேற்பட்டோர் அந்த பஸ்சை சிறைபிடித்து, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக க.பரமத்தி அருகே உள்ள முன்னூர் காந்திநகரை சேர்ந்த வடிவேல் (வயது 40) உள்பட 5 பேர் மீது க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்