< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மணப்பாறை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து - 10 பேர் படுகாயம்
|29 Nov 2022 7:30 AM IST
திருச்சி, மணப்பாறை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி,
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்க்கி அரசு விரைவுப் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மணப்பாறை அருகே நடுப்பட்டி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் விபத்துக்கு உள்ளானது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.