< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
|21 Aug 2023 12:15 AM IST
தேவதானப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூரில் இருந்து தேவாரத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டியை சேர்ந்த உதயகுமார் (வயது 42) என்பவர் ஓட்டினார். தேவதானப்பட்டி அரிசி கடை பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்தது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே கையில் அரிவாளுடன் வந்த மர்ம நபர் பஸ்சை மறித்தார்.
பின்னர் அவர் அரிவாளை காட்டி உதயகுமாரை மிரட்டினார். மேலும் அரசு பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தேவதானபட்டி போலீசில் உதயகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.