< Back
தமிழக செய்திகள்

சிவகங்கை
தமிழக செய்திகள்
அரசு பஸ் மரத்தில் மோதி 6 பயணிகள் காயம்

7 Oct 2023 12:15 AM IST
திருப்பத்தூர் அருகே வேலங்குடி கிராமத்தில் அரசு பஸ் மரத்தில் மோதியது. இந்த விபத்தில் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்
அரசு பஸ்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் வேலங்குடி-செவ்வூர் சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க சாலையில் இருந்து சற்று பஸ்சை இறக்கினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
6 பயணிகள் காயம்
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் மனோகர், கண்டக்டர் முருகேசன் மற்றும் பயணிகள் சிலம்பாயி (30), காந்திமதி (60), பழனியாயி மற்றும் சிறுவன் பாலமுருகன் (8) ஆகியோர் லேசான காயமடைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பூலாங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.