புதுக்கோட்டை
லாரி மீது அரசு பஸ் மோதல்; 15 பயணிகள் காயம்
|லாரி மீது அரசு பஸ் மோதல்; 15 பயணிகள் காயமடைந்தனர்.
விராலிமலை:
மதுரையிலிருந்து கடலூருக்கு 40 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் விராலிமலை வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் தூத்துக்குடியிலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கடலூரை சேர்ந்த பானுமதி, ஜெயஆறுமுகம், முஸ்தபா, புதுக்கோட்டையை சேர்ந்த சகாயராணி, வில்லிகிருஸ்டி உள்பட 15 பேர் காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.